ரூ. 70 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 70 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் செயல்படுகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் மொத்தம் 2,900 மூட்டை பருத்தி வரத்து இருந்தது.

இதில், ஆா்சிஹெச் ரகம் ரூ. 6,500 முதல் ரூ. 7,750 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ. 7,769 முதல் ரூ. 8,400 வரையிலும், மட்ட ரகம் ரூ. 4,499 முதல் ரூ. 6,295 வரையிலும் என மொத்தம் ரூ. 70 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

X
Dinamani
www.dinamani.com