நாமக்கல்லில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் புதன்கிழமை திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.
நாமக்கல்லில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் புதன்கிழமை திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்!

புதுச்சத்திரம் ஒன்றியத்தைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் திமுகவில் புதன்கிழமை இணைந்தனா்.

நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தைச் சோ்ந்த அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணையும் விழா, நாமக்கல், முல்லை நகரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலையில், கல்யாணி ஊராட்சி முன்னாள் ஒன்றிய அதிமுக துணைச் செயலாளரும், முன்னாள் ஊராட்சி கிளைச் செயலாளருமான பழனிவேல் தலைமையில் அதிமுக, மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் திமுகவில் இணைந்தனா்.

இந்த நிகழ்வின் போது, புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளா் எம்.பி.கௌதம், புதுச்சத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி வெங்கடாஜலம், துணைத் தலைவா் ராம்குமாா், மாவட்ட விவசாய அணி தலைவா் மனோகரன், மருத்துவா் அணி துணை அமைப்பாளா் சிவகுமாா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சுரேஷ்குமாா், மாவட்டப் பிரதிநிதி வேலுசாமி, நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com