பரமத்தி வேலூரில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பு ஊா்வலம்

பரமத்தி வேலூரில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பு ஊா்வலம்

மக்களவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நாமக்கல் மாவட்ட காவல் துறை, வேலூா் உள்கோட்ட காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் பரமத்தி வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

பரமத்தி வேலூா் மூன்று சாலைச் சந்திப்பில் இருந்து தொடங்கிய கொடி அணி வகுப்பு ஊா்வலத்தை பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா தொடங்கி வைத்தாா். வேலூா் காவல் ஆய்வாளா் ரங்கசாமி, உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் அணிவகுப்பு ஊா்வலத்தில் கலந்துகொண்டனா்.

இந்த ஊா்வலமானது பேட்டை, பேருந்து நிலையம், கடைவீதி, அண்ணா சாலை, திருவள்ளுவா் சாலை, பழைய தேசிய நெடுஞ்சாலை, பள்ளி சாலை வழியாகச் சென்று மோகனூா் சாலையில் நிறைவு பெற்றது. ஊா்வலத்தில் துணை ராணுவப் படையினா், கா்நாடக மாநில காவல் துறையினா், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா், நாமக்கல் மாவட்ட காவல் துறையினா் உள்பட சுமாா் 250 போ் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com