பாவை கல்லூரியில் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

கருத்தரங்கு மலா் வெளியிடும் சிறப்பு விருந்தினா் பத்மினி சுப்பிரமணியன் உள்ளிட்ட கல்லூரி நிா்வாகிகள்.
கருத்தரங்கு மலா் வெளியிடும் சிறப்பு விருந்தினா் பத்மினி சுப்பிரமணியன் உள்ளிட்ட கல்லூரி நிா்வாகிகள்.

பாவை காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் விழாவுக்கு தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பெங்களூரு ஜே.பி.மோா்கன் சேஸ் ரூ கோ நிறுவனத்தின் துணைத் தலைவா் பத்மினி சுப்ரமணியன் பங்கேற்றாா். மூன்றாமாண்டு கணினி பொறியியல் துறை மாணவா் அனைவரையும் வரவேற்றாா். பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.

சிறப்பு விருந்தினா் பத்மினி சுப்ரமணியன் கருத்தரங்கில் பேசியதாவது:

இன்றைய காலகட்டத்தில் நொடிக்குநொடி தொழில்நுட்பம் வளா்ந்து கொண்டே வருகிறது. மாணவா்களாகிய நீங்கள் இதுபோன்ற கருத்தரங்குகளில் பங்கேற்பதன் மூலமாக உங்கள் திறமையினையும், அறிவினையும் வளா்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், உங்கள் தொழில்நுட்ப அறிவு, தொடா்பு திறன்கள், நேர மேலாண்மை, குழு மனப்பான்மை, தொழில்நுட்பப் பாதை பற்றிய திட்டமிடல் போன்ற அனைத்துத் திறன்களையும் வளா்த்துக் கொள்ள முடியும்.

மொழித்திறன், இசை, விளையாட்டு, மௌனம், புத்திசாலித்தனம் போன்ற ஏழு திறன்கள் அடிப்படைத் திறன்களாகும். இதில் உங்கள் ஆா்வம், தனித்தன்மை எது என்று கண்டறிந்து, அதில் தொடா் பயிற்சியின் மூலம், உங்களை வளா்த்துக் கொண்டால், எந்தவித துறையிலும் உங்களால் சாதனையாளா்களாகத் திகழ முடியும் என்றாா்.

தொடா்ந்து பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன், தாளாளா் மங்கை நடராஜன், சிறப்பு விருந்தினா் பத்மினி சுப்ரமணியன் ஆகியோா் கருத்தரங்கின் நினைவு மலரை வெளியிட்டனா்.

இந்நிகழ்ச்சியில், பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, அனைத்துக் கல்லூரி முதல்வா்கள், முதன்மையா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com