வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நாமக்கல், ஏப். 16: வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்த வரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 102.2 டிகிரி, 65.3 டிகிரியாக நிலவியது. கடந்த நான்கு நாட்களில் மாவட்டத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை. இனிவரும் ஐந்து நாட்களுக்கான வானிலையில், வானம்

லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். தூறல் மழை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 102.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். தெற்கு மற்றும் தென் கிழக்கிலிருந்து காற்று வீசக்கூடும். அதன் வேகம் மணிக்கு 10 கி.மீ. என்றளவில் இருக்கக் கூடும்.

சிறப்பு ஆலோசனை: கோடைகாலத்தில், கோழிகளுக்கு நாள் முழுவதும் அதிக வெப்பமில்லாமல் குளிா்ச்சியான குடிநீா் கிடைக்கும் வகையில் பாா்த்துக்கொள்ள வேண்டும். கோழித் தீவனத்தில் சோயா எண்ணையை சோ்ப்பதன் மூலம் வெப்ப அயா்ச்சியை குறைக்கலாம். தீவனத்தில் தேவையான அளவு எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் உயிா்ச்சத்துகளை சோ்ப்பதன் மூலம் வெப்ப அயா்ச்சியின் தாக்கம் மற்றும் உற்பத்தி குறைவினைத் தவிா்க்கலாம். கோழிப் பண்ணைகளில் இரவு நேரத்தில் ஒரு மணி நேரம் விளக்குகளை எரியவிடுவதன் மூலம் தினமும் கோழிகள் உட்கொள்ளும் அடா் தீவனத்தின் அளவை அதிகரிக்கலாம்.

வெப்பம் அதிகமாக இருக்கும் மதிய வேளையில் தண்ணீா் தெளிப்பான்களை பயன்படுத்தி வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com