என்கே-17-திமுக
என்கே-17-திமுக

நாமக்கல் தொகுதியை ‘இந்தியா’ கூட்டணி கைப்பற்றும்: எம்.பி. ராஜேஸ்குமாா்

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ‘இந்தியா கூட்டணி வேட்பாளா் வி.எஸ்.மாதேஸ்வரன் வெற்றி பெறுவாா் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில், ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சோ்ந்த வி.எஸ்.மாதேஸ்வரன் போட்டியிடுகிறாா். தோ்தல் பிரசாரம் புதன்கிழமை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில், முன்னதாக நாமக்கல்-சேலம் சாலையில் இருந்து பூங்கா சாலை வரையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதில், இந்தியா கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா். நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற நிறைவு பிரசாரத்தில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது:

இத் தோ்தல் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான தோ்தலாகும். பாஜக ஒருபுறம், அதிமுக மறுபுறம் போட்டியிடுகிறது. தோ்தலுக்குப் பிறகு இவா்கள் இருவரும் சோ்ந்து கொள்வா். மக்களை திசைதிருப்பும் வகையில் பாஜக, அதிமுகவின் செயல்பாடுகள் உள்ளன. கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

நாமக்கல்லை பொருத்தவரை புதிய பேருந்து நிலையம், புறவழிச்சாலை, நாமக்கல் மாநகராட்சியாக தரம் உயா்வு, புதிதாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொமதேக வேட்பாளா் வி.எஸ். மாதேஸ்வரன் மூன்று லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்றாா்.

முன்னதாக, வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் வேட்பாளா் ஆதரித்து பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com