நாமக்கல் மாவட்ட ஆட்சியா் முதல் நபராக வாக்களிப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா, தனக்கான வாக்குச்சாவடியில் முதல் நபராக வாக்களித்தாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா, தனக்கான வாக்குச்சாவடியில் முதல் நபராக வாக்களித்தாா்.

நாமக்கல் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.உமா, வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் தன்னுடைய வாக்குச்சீட்டு உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள கிருஷ்ணாபுரம் அரசு தொடக்கப்பள்ளிக்கு வந்தாா். அங்கு, அரசியல் கட்சி முகவா்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதிக்கப்பட்டன. இதனையடுத்து, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் ச.உமா, வரிசையில் நின்று முதல் நபராக வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினாா். மேலும், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை உணா்த்தும் வகையில் விரலில் இட்ட மையை காண்பித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹா்குன்ஜித் கெளருடன் இணைந்து அவா் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை இணைய வழியாக காலை முதல் இரவு வரை கண்காணித்தாா்.

என்கே-19-கலெக்டா்

நாமக்கல் அருகே கிருஷ்ணாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்களித்த மாவட்ட ஆட்சியா் ச.உமா.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com