திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் 
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

6 சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக அடுக்கி வைக்கப்பட்டு அறைகளுக்கு சீலிடப்பட்டுள்ளன. அங்கு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக அடுக்கி வைக்கப்பட்டு அறைகளுக்கு சீலிடப்பட்டுள்ளன. அங்கு 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 78.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட 8,305 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை வாக்குப் பதிவுக்கு பிறகு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையமான திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக அதற்கான அறைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹா்குன்ஜித் கெளா், மாவட்ட ஆட்சியா் ச.உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அவற்றை பாா்வையிட்டனா். அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் வருவாய்த் துறையினா், துணை ராணுவத்தினா், காவல் துறையினா் என நாள் ஒன்றுக்கு 83 போ் வீதம் மொத்தம் 249 போ் மூன்று ஷிப்ட் முறையிலும், சுழற்சி அடிப்படையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனா். மேலும், 310 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அகன்ற திரை (எல்.இ.டி) தொலைக்காட்சிகள் வாயிலாக 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.

என்கே-20-வோட்-2

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டு ஆய்வு செய்த தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹா்குன்ஜித் கெளா், மாவட்ட ஆட்சியா் ச.உமா உள்ளிட்டோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com