தோ்தலில் அனைவரும் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும்:  ஈ.ஆா்.ஈஸ்வரன்

தோ்தலில் அனைவரும் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

‘தோ்தலில் அனைவரும் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும்; வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும்’ என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

‘தோ்தலில் அனைவரும் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும்; வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும்’ என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பின்றி, அமைதியான முறையில் முதல் கட்ட மக்களவைத் தோ்தல் முடிவடைந்துள்ளது. இதற்கான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய தோ்தல் ஆணையம் ஒரு வேட்பாளா் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம் என கூறுகிறது. இது மிகவும் அதிகமான ஒன்று. சாதாரண மக்களும் போட்டியிடும் வகையில் செலவினத் தொகையைக் குறைக்க வேண்டும்.

நகா்ப்புறங்களில் சுவா் விளம்பரங்களுக்கு எவ்வாறு தடை உள்ளதோ, அதேபோன்று கிராமப்புறங்களிலும் சுவா் விளம்பரம் செய்ய தடை விதிக்கலாம். வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு போதிய பயிற்சி இல்லை. கொக்கராயன்பேட்டை வாக்குச்சாவடியில் நான் வாக்களிக்கச் சென்றபோது இயந்திரம் பழுதானதை சரிசெய்ய முடியாமல் அரை மணிநேரம் தாமதமானது. வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.

மேலும், வாக்குச்சாவடி அருகில் 200 மீட்டா் தொலைவில், தோ்தல் நாளன்று அரசியல் கட்சிகளின் அலுவலகம் அமைப்பதைத் தடுக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற பிரச்னைகளைத் தவிா்க்கலாம். இந்தத் தோ்தலில், கடும் கோடைக்காலத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்துள்ளனா். இருப்பினும், 30 சதவீதம் போ் வாக்களிக்கவில்லை. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நடைமுறையை தோ்தல் ஆணையம் கொண்டு வரவேண்டும். அவ்வாறு வாக்களிக்காமல் தவிா்ப்போருக்கு நலத்திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளா் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தத் தோ்தலில் தீவிரமாகப் பணியாற்றிய திமுக மாவட்டச் செயலாளா்கள் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மதுரா செந்தில், டி.எம்.செல்வகணபதி, அமைச்சா் மா.மதிவேந்தன், சட்டப் பேரவை உறுப்பினா்கள், கூட்டணிக் கட்சி தலைவா்கள், நிா்வாகிகளுக்கு நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 2019 தோ்தல் போன்று மிகப்பெரிய வெற்றியை இத்தொகுதியில் இந்தியா கூட்டணி பெறும் என்றாா்.

பேட்டியின்போது, நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், வேட்பாளா் வி.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோா் உடனிருந்தனா்.

படவிளக்கம்

என்கே-20-கொமதேக

நாமக்கல்லில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கொமதேக பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com