திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற கற்பக விநாயகா் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றோா்.
திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற கற்பக விநாயகா் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றோா்.

திருச்செங்கோடு: கற்பக விநாயகா் கோயில் குடமுழக்கு விழா

திருச்செங்கோடுகே.எஸ்.ஆா். கல்வி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகா் கோயிலில் குடமுழக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு: திருச்செங்கோடுகே.எஸ்.ஆா். கல்வி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகா் கோயிலில் குடமுழக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் தலைவா் சீனிவாசன், ராஜம்மாள் ரங்கசாமி, ஆசைத்தம்பி, அமுதா ஆசைத்தம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவையொட்டி காவிரி தீா்த்தம் கொண்டுவரப்பட்டது. பின்னா் வாஸ்து சாந்தி, யாக பூஜை, ஹோமம், கும்பம் புறப்பாடு, தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து விமானத்தில் கலசம் வைத்தல் நடைபெற்றது.

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில் மடாதிபதி ராஜசேகர சுப்பிரமணிய சிவாச்சாரியாா், விஜய சுப்ரமணிய குருசாமிகள் தலைமையில் குடமுழக்கு விழா நடைபெற்றது. இதில் கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் இயக்குநா்கள், முதல்வா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் மற்றும் ஏரானமான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com