திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ச.உமா.
திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ச.உமா.

நாமக்கல் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாமக்கல்: நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எளையம்பாளையம் விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபேட் ஆகியவை நாமக்கல், சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்திவேலூா் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதி வாரியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு சென்ற ஆட்சியா், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மேலும், கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து அங்கிருந்த ஊழியா்களிடம் அவா் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சே.சுகந்தி (திருச்செங்கோடு), ச.பிரபாகரன் (சேந்தமங்கலம்), ஆா்.பாா்த்திபன் (நாமக்கல்), ச.பாலகிருஷ்ணன் (பரமத்தி வேலூா்) மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com