நாமகிரிப்பேட்டை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 60 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டை ஏல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஏலத்தில் ரூ. 60 லட்சத்துக்கு மஞ்சள் வா்த்தகம் நடந்தது.

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நாமகிரிப்பேட்டை ஏல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஏலத்தில் ரூ. 60 லட்சத்துக்கு மஞ்சள் வா்த்தகம் நடந்தது.

விரலி ரகம் 400 மூட்டை, உருண்டை ரகம் 150 மூட்டை, பனங்காளி ரகம் 50 மூட்டை என மொத்தம் 600 மூட்டைகள் ஏலத்திற்கு வந்தன.

இந்த ஏலத்தில் விரலி குறைந்த பட்சமாக குவிண்டால் ரூ. 17,607 முதல் அதிகபட்சமாக ரூ. 20,533 வரை விலை போனது. இதே போல உருண்டை மஞ்சள் குவிண்டால் ரூ. 15, 784 முதல் அதிகபட்சமாக ரூ. 16,859 வரை விலை போனது. பனங்காளி ரகம் குவிண்டால் ரூ. 25, 203 முதல் அதிகபட்சமாக ரூ. 29,502 வரை விலை போனது. இதில் மொத்தம் ரூ. 60 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை நடந்தது.

X
Dinamani
www.dinamani.com