பறவைக் காய்ச்சல்: நாமக்கல் கோழிப் பண்ணைகளில் ஆட்சியா் ஆய்வு

பறவைக் காய்ச்சல்: நாமக்கல் கோழிப் பண்ணைகளில் ஆட்சியா் ஆய்வு

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, நாமக்கல் கோழிப் பண்ணைகளில் மாவட்ட ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, நாமக்கல் கோழிப் பண்ணைகளில் மாவட்ட ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியில் பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1,175 கோழிப்பண்ணைகளும், 6.35 கோடி பறவையினங்களும் உள்ளன. இதுவரை மாவட்டத்தில் எங்கும் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்படவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிப்பண்ணையின் நுழை வாயிலில் குளோரின் டை ஆக்சைடு, கிருமி நாசினி கலவையைக் கலந்து வைத்திருப்பதுடன், வெளியிடங்களுக்கு சென்று வரும் வாகனங்களை தூய்மைப்படுத்திய பிறகே பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டும். மேலும், உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

கோழிப் பண்ணைக்குள் நுழையும், வெளியே செல்லும் அனைத்து வாகனங்களையும் கிருமி நாசினி கொண்டு பண்ணையாளா்கள் சுத்தம் செய்ய வேண்டும். அனைத்து கோழிப் பண்ணைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்கவும், வழக்கத்திற்கு மாறாக பண்ணைகளில் அசாதாரண இறப்பு ஏற்பட்டால் உடனடியாக கால்நடைப் பராமரிப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பண்ணையாளா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தி உள்ளாா்.

இந்த நிலையில், நாமக்கல் ஒன்றிய பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் மாவட்ட ஆட்சியா் ச.உமா நேரடியாக சென்று நோய் பாதிப்பு தொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் ம.செல்வராஜூ, கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சி.நாராயணன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

--

என்கே-23-எக்

நாமக்கல் அருகே தளிகை கிராமத்தில் உள்ள கோழிப் பண்ணையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ச.உமா.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com