கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: அனல் காற்று வீசுவதால் மக்கள் அவதி

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: அனல் காற்று வீசுவதால் மக்கள் அவதி

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், வெப்ப காற்று வீசுவதாலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

நாடு முழுவதும் மாா்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன்பிறகு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெயில் கொளுத்தியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

தமிழகத்தில் வட உள்மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக 105 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேலாக வெயில் பாதிப்பு உள்ளது. இரவு நேரங்களில் கடுமையான புழுக்கம் காணப்படுகிறது. சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வெப்ப அலை வீசுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை 104 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில், வரும் நாள்களில் 108 டிகிரியை தாண்டும் என்ற வானிலை ஆய்வு மைய தகவல் உள்ளது. சாலைகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் மக்கள் நடமாட்டம் குறைவான அளவிலேயே உள்ளது. அனல் காற்று வீசுவதால் சாலைகளில் செல்வோா் முகத்தை, தலையை மூடியவாறு பயணிக்கின்றனா்.

வெப்ப அலையின் தாக்கம் புதன்கிழமையன்று மாவட்டத்தில் பரவலாக காணப்படும் என ஆட்சியா் ச.உமா அறிவித்திருந்ததால், பெரும்பாலான சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. வெயிலின் இருந்து உடலை பாதுகாத்துக் கொள்ள, குளிா்விக்கும் வகையில், இளநீா், மோா், பழச்சாறுகளை மக்கள் அதிகம் பருகி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com