வேலூா் பேட்டை புதுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா தொடக்கம்: கம்பம் நடப்பட்டது

வேலூா் பேட்டை புதுமாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா தொடக்கம்: கம்பம் நடப்பட்டது

பரமத்தி வேலூா், பேட்டையில் எழுந்தருளியுள்ள சக்தி கண்ணனூா் புது மாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு பூச்சாட்டுதல், கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.

இவ் விழாவைத் தொடா்ந்து புதன்கிழமை இரவு புஷ்ப வியாபாரி சங்கம் சாா்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரமும், மகா தீபாராதனை நடைபெற்றது. வியாழக்கிழமை இரவு அம்மன் யானை வாகனப் புறப்பாடு நிகழ்ச்சியும், வெள்ளிக்கிழமை மாலை பூச்சொரிதல் விழாவும், இரவு காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

27, 28-ஆம் தேதி இரவு அம்மன் அன்ன வாகனம், சா்ப்ப வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 29-ஆம் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 30-ஆம் தேதி மாலை தீமிதி விழாவும், இரவு சிங்க வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மே 1-ஆம் தேதி காலை பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்ற அழகு போடுதல், அக்கினிச் சட்டி எடுத்தல், மாலையில் பொங்கல், மாவிளக்கு படைத்தல், , ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. 2- ஆம் தேதி தேதி காலை கம்பத்தை காவிரி ஆற்றுக்கு எடுத்துச் செல்லுதல், இரவு அம்மன் சப்பரத்தில் திருவீதி உலா வருதல், 3- ஆம் தேதி மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வேலூா் பேட்டை புது மாரியம்மன் கோயில் விழா குழுவினா், ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com