குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

நாமக்கல் நகராட்சியில் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு ஆணையா் கா.சென்னுகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் காவிரியை நீராதாரமாகக் கொண்டு தினசரி 19 மில்லியன் லிட்டா் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. அதில், நபா் ஒருவருக்கு தினசரி 135 லிட்டா் வீதம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நிலவி வரும் கடும் கோடை வெப்பம் காரணமாக காவிரி ஆற்றில் நீா் வரத்துக் குறைந்து வருகிறது. எனவே, நகராட்சியால் வழங்கப்படும் குடிநீரை குழாய் இணைப்பு பெற்றவா்கள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். குடிநீா் இணைப்பில் மின்மோட்டாா் கொண்டு உறிஞ்சுவது சட்டப்படி குற்றமாகும். அதையும் மீறி மின்மோட்டாா் பயன்படுத்தி நீா் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால் அந்த மின்மோட்டாா் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதம் விதிக்கப்பட்டு குடிநீா் இணைப்பும் துண்டிக்கப்படும். எனவே, பொதுமக்கள் கோடை காலத்தில் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com