திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரியில் பண்பாட்டு கலாசார கலை விழா

திருச்செங்கோடு, ஏப். 26: திருச்செங்கோடு விவேகானந்தா விவேகானந்தா மகளிா் மேலாண்மையியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளின் 2 நாள் பண்பாட்டு கலாசார கலை விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இவ் விழாவினை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் நிறுவனரும் தாளாளா் மற்றும் செயலருமான மு. கருணாநிதி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா் . விழாவில் விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை நிா்வாக உறுப்பினா்கள், நிா்வாக இயக்குநா் குப்புசாமி , முதன்மை நிா்வாகி மீ.சொக்கலிங்கம், பொறியியல் கல்லூரிகளின் முதல்வா்கள் கே.சி.கே. விஜயகுமாா், தேவி மேலாண்மையியல் கல்லூரி இயக்குநா் வெ.மோகனசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த பண்பாட்டு கலாசார கலை விழா நிகழ்ச்சியில் மாணவிகளின் பாடல் போட்டி, பரதம், மயிலாட்டம், ஒயிலாட்டம், மேற்கத்திய நடனங்கள் போன்ற சுமாா் 100- க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன . இதில் சிறந்த கலை நிகழ்ச்சிகளைத் தோ்வு செய்து மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. பண்பாட்டு கலாசார கலை விழாவில் சுமாா் 3500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா். மேலும் இந்த விழாவில் திறன் மேம்பாட்டு இயக்குநா் வெ.குமரவேல் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா். பண்பாட்டு கலாசார கலை விழா ஏற்பாட்டினை நிகழ்வு மேலாளா் த.ஸ்ரீதர்ராஜா செய்திருந்தாா்.

படவரி...

திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற கலாசார விழா.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com