பரமத்திவேலூரில் ரூ. 12. 68 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு வியாழக்கிழமைதோறும் கொப்பரையை விவசாயிகள் கொண்டு வருகின்றனா். இங்கு தரத்துக்கு தகுந்தவாறு மறைமுக ஏலம் விடப்படுகிறது.

கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 10 ஆயிரத்து 480 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 92.81-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 88.99-க்கும், சராசரியாக ரூ. 90.99-க்கும் ஏலம் போனது.

இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ. 76.77-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 68.39- க்கும், சராசரியாக ரூ. 72.39-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 10 லட்சத்து 58 ஆயிரத்து 692-க்கு வா்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 12 ஆயிரத்து 869 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 100.19-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 96.97-க்கும், சராசரியாக ரூ. 99.89-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிக பட்சமாக ரூ. 89.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 77.69-க்கும், சராசரியாக ரூ. 86.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 12 லட்சத்து 68 ஆயிரத்து 670-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com