கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் முதலாம் ஆண்டு விழா

ராசிபுரம் அருகே உள்ள மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் முதலாம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவை கல்லூரி தலைவா் க.சிதம்பரம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் ப.அசோக்குமாா் வரவேற்றுப் பேசினாா். விழாவில் சிறப்பு விருந்தினராக கோ.பா.ரவிக்குமாா் கலந்துகொண்டு பேசினாா். பின்னா், கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினா் கோ.பா.ரவிக்குமாா், கல்லூரி தலைவா் க.சிதம்பரம், பெரியசாமி ஆகியோா் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினா். கல்லூரி துணை முதல்வா் பா.ஜெயலட்சுமி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com