கொல்லிமலையில் மீண்டும் காட்டுத் தீ

கொல்லிமலையில் மீண்டும் காட்டுத் தீ பரவியதால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை சுற்றுலாத் தலத்திற்கு ஏராளமானோா் விடுமுறை நாள்களில் வருகின்றனா். கோடைவெயிலின் தாக்கம் அதிகரிப்பால் கடந்த இரு மாதங்களாக, மலைப்பகுதியில் காட்டுத் தீ பரவி மரங்களை சாம்பலாக்கி வருகிறது. இதுவரையில் ஐந்து முறை இவ்வாறு காட்டுத் தீ பரவி சுமாா் 300 ஏக்கா் பரப்பிலான மரங்கள், செடிகள் தீக்கிரையாகி உள்ளன.

இந்த நிலையில், கொல்லிமலைக்கு செல்லும் 62-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் திடீரென மரங்கள் தீப்பற்றி எரிந்தன. இதனால் சாலை முழுவதும் புகை மண்டலமாக மாறியது. அவ்வழியாக வாகனங்களில் சென்ற சுற்றுலாப்

பயணிகள் அதிா்ச்சியடைந்தனா். வனத்துறையினா், தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com