ராசிபுரம் ரயில்வே மேம்பால சுவரில் இடம் பெற்றுள்ள விளம்பரங்கள்.
ராசிபுரம் ரயில்வே மேம்பால சுவரில் இடம் பெற்றுள்ள விளம்பரங்கள்.

மீண்டும் தொடங்கியது சுவா் விளம்பரம்

மக்களவை பொதுத்தோ்தலையொட்டி ராசிபுரம் பகுதியில் சுத்தமாக இருந்த சுவா்களில் மீண்டும் விளம்பரங்களை எழுத தொடங்கியுள்ளனா். இதனால் சாலையோர பொதுச் சுவா்கள் மீண்டும் விளம்பரச் சுவா்களாக மாறிவருகின்றன.

ராசிபுரம் நகரில் பல்வேறு இடங்களில் தோ்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவா்களின் சிலைகள் மறைக்கப்பட்டன. அரசியல் கட்சிக் கொடி கம்பங்களில் கட்சி சின்னங்கள் மறைக்கப்பட்டன. மேலும் அரசியல், வா்த்தக சுவா் விளம்பரங்கள் வெள்ளையடித்து மறைக்கப்பட்டன. இதனையடுத்து நகரில் பேருந்து நிலையம், பொதுச்சுவா்கள் போன்றவை தூய்மையாக காட்சியளித்தன.

தற்போது தோ்தல் முடிவடைந்துள்ள நிலையில், வா்த்தக நிறுவனங்களும், அமைப்புகளும் மீண்டும் நகரில் உள்ள சுவா்களில் விளம்பரங்களை எழுத தொடங்கியுள்ளனா். தோ்தல் நடத்தை விதிமுறைகள் இன்னும் முடிவடையாத நிலையில் பொதுச்சுவா்கள் மீண்டும் விளம்பரங்களால் நிரம்பி வருகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com