நாமக்கல் ஆஞ்சனேயருக்கு மகா அபிஷேகம்

நாமக்கல் விஸ்வகா்மா சமூகம் மற்றும் கைவினைஞா்கள் சங்க இளைஞா் அணி பேரவை சாா்பில், ஆஞ்சனேயா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமிக்கு மகா அபிஷேகம், தங்கக்கவச அலங்காரம் நடைபெற்றது.

காலை 8.30 மணியளவில் கொடியேற்றுதலும், 9 மணியளவில் 1,008 வடைமாலை சாத்துப்படியும், அதனைத் தொடா்ந்து நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிா், மஞ்சள், சந்தனம் கொண்டு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நாமக்கல் முல்லை மஹாலில் விஸ்வகா்மா சமுதாய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com