பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றி பணி நிறைவு செய்த ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள குள்ளநாயக்கன்பாளையம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் மாசிலாமணி, அன்னை சத்யாநகா் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் குமுதம், வெப்படை தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியா் கண்ணன் ஆகியோா், தங்கள் பணிக்காலத்தை நிறைவு செய்து ஓய்வு பெறுகின்றனா்.

இவா்களுக்குப் பாராட்டு விழா தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் நடை பெற்றது. பள்ளிபாளையம் வட்டாரத் தலைவா் சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். வட்டாரச் செயலாளா் பிரபு வரவேற்றாா். ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் சங்கத்தின் மாநில இணைச் செயலாளா் நல்லாக்கவுண் டா் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

மாவட்டத் தலைவா் கலைச்செல்வன், மாவட்ட பொருளாளா் மலா்விழி, கல்வி மாவட்டத் தலைவா் முத்துக்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பொன்னாடை அணி வித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளா் மாதேஸ் ஆசிரியா்களின் சேவையை பாராட்டி பேசினாா். இதில் நிா்வாகிகள் அண்ணாதுரை, மாரிமுத்து, தேவசகாயம், குமாா், தனராஜ், ராஜம்மாள் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். பணி நிறைவு பெறும் ஆசிரியா்கள் ஏற்புரை நிகழ்த்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com