திருச்செங்கோட்டில் ரூ. 1.56 கோடிக்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோடு, வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைமையகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.56 கோடிக்கு மஞ்சள் மூட்டைகள் விற்பனையாகின.

திருச்செங்கோடு: திருச்செங்கோடு, வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைமையகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.56 கோடிக்கு மஞ்சள் மூட்டைகள் விற்பனையாகின.

ஏலத்துக்கு ஜேடா்பாளையம், சோழசிராமணி, இறையமங்கலம், சங்ககிரி, எடப்பாடி, கொளத்தூா், , ஓமலூா், அரூா், பொம்மிடி, ஊத்தங்கரை, கொடுமுடி, பாசூா், அந்தியூா், துறையூா் தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், ராயவேலூா், செய்யாா், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

இதில் விரலி ரக மஞ்சள் ரூ. 17,171 முதல் ரூ. 19,939 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ. 16,078 முதல் ரூ. 17,709 வரையிலும், பனங்காளி ரக மஞ்சள் ரூ. 20,164 முதல் ரூ. 28,002 வரையிலும் விற்பனையானது. மொத்தம் 1,350 மூட்டைகள் ரூ. 1.56 கோடிக்கு விற்பனையானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com