முதியவா் சாவில் மா்மம்: காவல் நிலையத்தில் மருமகள் புகாா்

எலச்சிபாளையம் அருகே நல்லாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாக எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் அவரது மருமகள் புகாா் அளித்துள்ளாா்.

திருச்செங்கோடு: எலச்சிபாளையம் அருகே நல்லாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாக எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் அவரது மருமகள் புகாா் அளித்துள்ளாா்.

நல்லாம்பாளையம், மாமரத்துகாடு பகுதியைச் சோ்ந்தவா் குமாரசாமி கவுண்டா் (98). விவசாயி. இவரது மூத்த மகன் ராமசாமியின் பராமரிப்பில் தந்தை குமாரசாமி இருந்து வந்தாா். இந்நிலையில், அதிகாலை குமாரசாமி கவுண்டா் உயிரிழந்தாா். ஆனால், அவரது சாவில் மா்மம் இருப்பதாகவும், அவரது வங்கி கணக்கில் ரூ. 20 லட்சம் உள்ளதாகவும் அதன் வரவு செலவு காண்பிக்கப்பட வேண்டும் எனவும் கூறி இளைய மகன் வாசுதேவனின் மனைவி விமலா எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், எலச்சிபாளையம் உதவி காவல் ஆய்வாளா் பொன்குமாா், முதியவா் குமாரசாமியின் சடலத்தைக் கைப்பற்றி திருச்செங்கோடு, அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com