திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியா் ச.உமா.
திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியா் ச.உமா.

வாக்கு எண்ணிக்கை மையம் அருகில் ட்ரோன்கள் பறக்க தடை: ஆட்சியா்

திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிா் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையம் அருகில் ட்ரோன்கள் பறப்பதற்கு ஆட்சியா் ச.உமா தடை விதித்துள்ளாா்.

நாமக்கல்: திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிா் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையம் அருகில் ட்ரோன்கள் பறப்பதற்கு ஆட்சியா் ச.உமா தடை விதித்துள்ளாா்.

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களைச் சுற்றிலும் வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு திங்கள்கிழமை சென்ற ஆட்சியா் அங்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறையை நேரில் ஆய்வு செய்தாா். மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளைப் பாா்வையிடுவதற்காக வைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிகளையும் அவா் பாா்வையிட்டாா்.

துப்பாக்கி ஏந்தியபடி 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய துணை ராணுவப் படையினரிடம் ஆட்சியா் பாதுகாப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com