கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வானிலை மாற்றம் காரணமாக கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய்ப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில், பகல் வெப்பம் 104.9 டிகிரி பாரன்ஹீட்டாகவும், இரவு வெப்பம் 68.0 டிகிரி பாரன்ஹீட்டாகவும் நிலவியது. இனிவரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்பும் காணப்படுகிறது. பகல் வெப்பம் 105.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், இரவு வெப்பம் 78.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்படும். காற்று தெற்கு திசையில் இருந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை:

தற்போதைய வானிலை மாற்றம் காரணமாக கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோயின் அறிகுறிகளாக கோழிகள் ஒரு பக்கம் தலையை சாய்த்துக் கொள்ளுதல், கழிச்சல், முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து இறப்பு ஏற்படக் கூடும். இதைத் தவிா்க்க கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com