முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

களங்காணியில் ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து தங்களது மலரும் நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

நாமக்கல் அருகே களங்காணியில் ஆதிதிராவிட நல அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப் பள்ளியில், 1998-99 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியா் 25 ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் நிகழ்ச்சி அண்மையில் நாமக்கல்லில் நடைபெற்றது.

இதில், மாணவ, மாணவிகள் தங்களுடைய குடும்ப உறுப்பினா்களுடன் கலந்து கொண்டனா். ஒருவருக்கொருவா் பழைய நினைவுகளைப் பகிா்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இவற்றில் பெரும்பாலான மாணவ மாணவிகள் தற்போது அரசு மருத்துவா்களாகவும், வேளாண் ஆராய்ச்சியாளா்களாகவும், பல்வேறு கல்வி நிறுவனங்களில் ஆசிரியா்கள், பேராசிரியா்கள், மத்திய, மாநில அரசு ஊழியா்களாவும், வெளிநாடுகளில் பொறியாளா்களாகவும், தொழில் முனைவோா்களாகவும் பணியாற்றி வருகின்றனா்.

தங்களுடைய முன்னேற்றத்தில், களங்காணி அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், ஆசிரியா்களுக்கும் பெரும் பங்குள்ளதாக பெருமையுடன் அவா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com