ரூ. 78 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 78 ஆயிரத்து 861-க்கு தேங்காய் ஏலம்போனது.

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெறுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 1,234 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 31.79 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 30.19 க்கும், சராசரியாக ரூ. 28.29 க்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 36 ஆயிரத்து 977 க்கு வா்த்தகம் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 2,679 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டுவந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 32.10 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 26.79 க்கும், சராசரியாக ரூ. 29.29 க்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 78 ஆயிரத்து 861-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com