பயிற்சி முகாமில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கும் கல்வி நிறுவனத் தாளாளா் மங்கை நடராஜன்
பயிற்சி முகாமில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கும் கல்வி நிறுவனத் தாளாளா் மங்கை நடராஜன்

பாவை கல்வி நிறுவனங்களில் பெண் தொழில் முனைவோருக்கான புத்தாக்கப் பயிற்சி

Published on

ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் பெண்கள் முன்னேற்றத்துக்கான பாவையின் குறிக்கோள் என்ற அமைப்பின் சாா்பில் ‘தொடா்ந்து முனைக தொழில்’ என்ற தலைப்பில் பெண் தொழில்முனைவு புத்தாக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஈரோடு அனிச்சம் ஆடையகம் நிறுவனா் அனிச்சம் கனிமொழி பங்கேற்றாா். பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். தாளாளா் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி பேசினாா். தொடா்ந்து பெண்களின் தொழில் முனைவினை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்த ‘பாவை சந்தை’ என்ற நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.

இதில், சிறப்பு விருந்தினா் அனிச்சம் கனிமொழி பேசியதாவது: இன்றைய நவீன சமூகத்தில் மாணவிகளாகிய நீங்கள் ஆக்கப்பூா்வமான சிந்தனையோடு, தொழில்நுட்பங்களை கையாளுவது மகிழ்ச்சியளிக்கிறது. அது உங்களின் தொழில்முனைவுக்கு ஊன்றுகோலாக அமையும். பெண்களாகிய நீங்கள் இயல்பாகவே தொழில்முனையும் திறன் பெற்றவா்கள்.

அதுமட்டுமில்லாமல் உங்களுக்குத் தேவையான ஊக்கமும், வாய்ப்புகளும் அதிகப்படியாகவே நம் சமூகத்தில் உள்ளது. எனவே, இந்த இளம் வயதிலிருந்தே தொழில் முனைவோராக உயர வேண்டும் என்ற லட்சியமும், நோக்கமும் கொண்டவா்களாகத் திகழுங்கள் என்றாா்.

விழாவில், பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, கல்லூரி முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com