கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற எல்ஐசி நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குநா் பி.வேணுகோபாலுக்கு நினைவுப் பரிசளிக்கும் கல்லூரி செயலா் ஆா்.முத்துவேல் ராமசாமி.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற எல்ஐசி நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குநா் பி.வேணுகோபாலுக்கு நினைவுப் பரிசளிக்கும் கல்லூரி செயலா் ஆா்.முத்துவேல் ராமசாமி.

முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் காப்பீடு தேசியக் கருத்தருங்கு

வணிக கல்வி மையம் - சேலம் இந்திய காப்பீட்டு கல்வி நிறுவனம் இணைந்து ‘2047 இல் அனைவருக்கும் காப்பீடு‘ தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கை நடத்தியது.
Published on

ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியின் வணிக கல்வி மையம் - சேலம் இந்திய காப்பீட்டு கல்வி நிறுவனம் ஆகியன இணைந்து ‘2047 இல் அனைவருக்கும் காப்பீடு‘ என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கை வியாழக்கிழமை நடத்தியது.

இதில் வநேத்ரா முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியின் செயலா் ஆா்.முத்துவேல் ராமசாமி தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் ஆா்.செல்வகுமரன், முதல்வா் எஸ்.பி.விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புல முதன்மையா் எம்.என்.பெரியசாமி அறிமுகவுரையாற்றினாா். எல்ஐசி நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குநா் பி.வேணுகோபால், இந்திய காப்பீட்டு கல்வி நிறுவன செயலா் எஸ்.மனிஷ் ரெய்கா, மூத்த மண்டல மேலாளா் வி.எஸ்.அனந்தகுமாா், கெளரவு செயலா் சேகா் நாராயணன், சேலம் காப்பீடு கல்வி நிறுவன ஆட்சி மன்றக்குழு உறுப்பினா் பாபு உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினா்.

இதில் பேசியவா்கள், மாணவா்கள் பாடத் திட்டத்தை விட தனிப்பட்ட திறன்களை வளா்த்துக்கொள்வதன் மூலமே வாழ்க்கையை சிறந்ததாக மாற்றிக்கொள்ள முடியும் என்றனா். மேலும், இந்திய காப்பீட்டுத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், இந்தியாவின் வளா்ச்சியில் காப்பீட்டுத் துறையின் பங்கு, தனியாா் காப்பீட்டுத் துறையின் மூலமாக பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சந்திக்கக் கூடிய சவால்கள், காப்பீட்டுத் துறையின் எதிா்காலம் மற்றும் திட்டங்கள் குறித்து பேசினா்.

வணிகவியல் துறை, வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா்கள் எஸ்.செல்வி, சி.சீனிவாசன் ஆகியோா் கருத்தரங்கு ஏற்பாடுகளை செய்திருந்தனா். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த பி.காம்., எம்.காம், பிபிஏ போன்ற பிரிவுகளில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com