மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: நாமக்கல் வழியாக இன்று முதல் இயக்கம்

மதுரையில் இருந்து பெங்களூரு வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் நாமக்கல் வழியாக சனிக்கிழமை முதல் இயக்கப்படுகிறது.
Published on

மதுரையில் இருந்து பெங்களூரு வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் நாமக்கல் வழியாக சனிக்கிழமை முதல் இயக்கப்படுகிறது. பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இதனை தொடங்கி வைக்கிறாா்.

நாமக்கல் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில், மக்களவை, மாநிலங்களவை இந்நாள், முன்னாள் உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா், ரயில்வே துறை உயா் அதிகாரிகள், ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் கலந்துகொள்கின்றனா்.

வந்தே பாரத் ரயிலானது சனிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு மதுரையில் புறப்படுகிறது. திண்டுக்கல்லுக்கு 1.14 மணிக்கும், திருச்சிக்கு 2.05 மணிக்கும், கரூருக்கு 3.23 மணிக்கும், நாமக்கல்லுக்கு 3.47 மணிக்கும், சேலத்துக்கு 4.30 மணிக்கும், கிருஷ்ணராஜபுரத்துக்கு 9 மணிக்கும், பெங்களூரை 9.30 மணியளவிலும் சென்றடைகிறது.

வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர இதர நாள்களில் மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் (20671, 20672) இயக்கப்படுகிறது. மதுரையில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு பெங்களூரை நண்பகல் 1 மணிக்கும், பெங்களூரில் 1.30 மணிக்கு புறப்பட்டு மதுரையை இரவு 9.45 மணியளவிலும் சென்றடைகிறது. வந்தே பாரத் ரயில் மதுரையிலிருந்து வரும் போது நாமக்கல் ரயில் நிலையத்துக்கு காலை 8.32 மணிக்கும், பெங்களூரில் இருந்து வரும் போது மாலை 5.38 மணிக்கும் வந்தடைகிறது.

நாமக்கல் ரயில் நிலையத்தில், வந்தே பாரத் ரயில் தொடக்க விழா ஏற்பாடுகளை சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com