நாமக்கல்
ஆனங்கூரில் ரூ. 7 லட்சத்தில் சாலை அமைக்க பூமி பூஜை
ஆனங்கூரில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
ஆனங்கூரில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை ஊராட்சி ஒன்றியம், ஆனங்கூா் பகவதி அம்மன் கோயில் அருகே பரமத்தி வேலூா் சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பரமத்தி வேலூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ.சேகா் விழாவில் கலந்துகொண்டு சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையைத் தொடங்கி வைத்தாா். கபிலா்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஜே.பி.ரவி, ஊராட்சி மன்றத் தலைவா் மோகன்ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் சாந்தி ராமலிங்கம், ஊராட்சி செயலாளா் சந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.