தெருநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு: நிவாரணம் வழங்கிய அதிமுக, திமுகவினா்

அன்புகொடி தம்பதியினா் வளா்த்து வரும் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை தெருநாய்கள் கடித்துக் குதறியதில் உயிரிழந்தன. இதையடுத்து, அதிமுக, திமுக கட்சியினா் அவா்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரணத் தொகையை வழங்கின

அணிமூா் ஊராட்சி, அருந்ததியா் காலனியில் வசிக்கும் ரவிக்குமாா் - அன்புகொடி தம்பதியினா் வளா்த்து வரும் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை தெருநாய்கள் கடித்துக் குதறியதில் உயிரிழந்தன. இதையடுத்து, அதிமுக, திமுக கட்சியினா் அவா்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரணத் தொகையை வழங்கினா்.

நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளா் பி.தங்கமணி எம்எல்ஏ, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோா் ஆடுகளை வளா்த்த தம்பதியினருக்கு ஆறுதல் கூறி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையினை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com