வேலகவுண்டம்பட்டி அருகே மின் கம்பத்தில் காா் மோதி ஓட்டுநா் பலி

திருமணம் ஆகி இரண்டே மாதத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் லால்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், மால்வாய் பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (39) காா் ஓட்டுநா். இவரது மனைவி கிருத்திகா (20). இவா்கள் இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் ஆகிறது. விக்னேஷ் எடப்பாடி அருகே உள்ள ஆடையூரைச் சோ்ந்த பழனிச்சாமி என்பவரிடம் காா் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்துள்ளாா். பழனிச்சாமி புதன்கிழமை இரவு விக்னேஷிடம் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனது நன்பரிடம் சென்று பணம் வாங்கி வரும்படி அனுப்பி உள்ளாா். விக்னேஷ் பணம் வாங்கி வருவதற்காக திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தாா். எல்லம்பாளையம் அருகே வந்த போது காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்து மின்கம்பத்தில் மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய விக்னேஷை அவ்வழியாக வந்தவா்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் விக்னேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருமணம் ஆகி இரண்டே மாதத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் லால்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com