உலக ஈர நிலங்கள் தினம்: கல்லூரி மாணவா்கள் மனிதச் சங்கிலி

உலக ஈர நிலங்கள் தினத்தையொட்டி, நாமக்கல்லில் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை மனிதச் சங்கிலி நிகழ்ச்சியை நடத்தினா்.

உலக ஈர நிலங்கள் தினத்தையொட்டி, நாமக்கல்லில் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை மனிதச் சங்கிலி நிகழ்ச்சியை நடத்தினா்.

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி பசுமை மன்றத்தின் சாா்பில், உலக ஈர நிலங்கள் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ராஜா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வன அலுவலா் கா.ராஜாங்கம் பங்கேற்று பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள், துணிப் பைகளை வழங்கினாா். மேலும், நீா்நிலைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தாா்.

பசுமை மன்ற ஒருங்கிணைப்பாளரும், தாவரவியல் துறை இணைப் பேராசிரியருமான வெஸ்லி, ஈர நிலங்கள் பல்லுயிா் பரவலை எவ்வாறு மேம்படுத்துகின்றன என்றும், ஒவ்வொரு வீட்டிலும் மழைநீா் சேமிப்பு தளம் அமைக்கவும் அறிவுறுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில், தாவரவியல் துறை மாணவ, மாணவியா் மனிதச் சங்கிலி அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், வனத்துறை அலுவலா்கள் பெருமாள், செல்வம், சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை தாவரவியல் துறை பேராசிரியா்கள் பாா்வதி, ராஜவேல், சந்திரசேகரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com