காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரையில் இளைஞா்கள் 5,000 கி.மீ. நடைப்பயணம்

ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரையில் 2 இளைஞா்கள் 5,000 கி.மீ. தொலைவு நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனா்.
காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரையில் இளைஞா்கள் 5,000 கி.மீ. நடைப்பயணம்

ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரையில் 2 இளைஞா்கள் 5,000 கி.மீ. தொலைவு நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனா்.

ஹரியாணாவை தலைமையிடமாகக் கொண்டு தேசிய சமூக ஒருங்கிணைப்புக் குழு செயல்படுகிறது. இக்குழுவில் உள்ள 10 ஆயிரம் போ் பூச்சிக்கொல்லி அல்லாத இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, ‘ஆரோக்கியமான இளைஞா்கள், ஆரோக்கியமான இந்தியா’ என்ற தலைப்பின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைப்பயணம் மூலமாக மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

அந்த வகையில், பட்டதாரி இளைஞா்களான ஹரியாணாவைச் சோ்ந்த தீபக் யாதவ் (24), ராஜஸ்தானைச் சோ்ந்த ஹிராலால் மஹாவா் (27) ஆகிய இருவரும் காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரையில் 5,000 கி.மீ. தொலைவு நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனா். கடந்த ஆண்டு நவ. 17-இல் தேசியக் கொடியுடன் காஷ்மீரில் இவா்கள் தொடங்கிய விழிப்புணா்வு நடைப்பயணம் இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, தில்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கா்நாடகம் வழியாக ஜன. 31-இல் தமிழகத்தை வந்தடைந்துள்ளனா். பிப். 8-இல் கன்னியாகுமரியில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளனா்.

90 நாள்களில் நடைப்பயணத்தை முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இளைஞா்கள் ஆா்வமுடன் செல்கின்றனா். அவா்களுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com