பரமத்தி வேலூரில் முல்லை கிலோ ரூ. 1,000-க்கு ஏலம்

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்கள் விலை சரிவடைந்ததால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்தனா்.
பரமத்தி வேலூரில் முல்லை கிலோ ரூ. 1,000-க்கு ஏலம்

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்கள் விலை சரிவடைந்ததால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்தனா்.

பரமத்தி வேலூா், கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிா் செய்துள்ளனா். இங்கு விளையும் பூக்களை பறித்து பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 900-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 40-க்கும், அரளி கிலோ ரூ. 120- க்கும், ரோஜா கிலோ ரூ. 160-க்கும், முல்லை கிலோ ரூ. 1,000-க்கும், செவ்வந்தி ரூ. 100-க்கும், கனகாம்பரம் ரூ. 800-க்கும், காக்கட்டான் ரூ. 250-க்கும் ஏலம் போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com