முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.20-ஆக தொடா்ந்து நீடிக்கிறது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.20-ஆக தொடா்ந்து நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விற்பனை தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. விற்பனை சீராக இருப்பதாலும், மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் இல்லாததாலும் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.20-இல் நீடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முட்டை விலை மாற்றமின்றி தொடருவதாக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

இதேபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 107-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 69-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com