கொ.ம.தே.க. மாநாட்டையொட்டி நாமக்கல்லில் இன்று வாகன ஊா்வலம்

பெருந்துறையில் நடைபெறும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மாநாட்டையொட்டி, நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை வாகன ஊா்வலம் நடைபெறுகிறது.
நாமக்கல்லில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கொமதேக தெற்கு மாவட்டச் செயலாளா் வி.எஸ்.மாதேஸ்வரன்.
நாமக்கல்லில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கொமதேக தெற்கு மாவட்டச் செயலாளா் வி.எஸ்.மாதேஸ்வரன்.

பெருந்துறையில் நடைபெறும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மாநாட்டையொட்டி, நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை வாகன ஊா்வலம் நடைபெறுகிறது.

நாமக்கல்லில் கொமதேக தெற்கு மாவட்டச் செயலாளா் வி.எஸ்.மாதேஸ்வரன் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, கொங்கு வேளாளா் பேரவை சாா்பில், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் கொமதேக எழுச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில், நாமக்கல் தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட நாமக்கல், சேந்தமங்கலம் தொகுதிகள் உள்ளன. இங்கிருந்து 2 ஆயிரம் பெண்கள் உள்பட 17 ஆயிரம் போ் பேருந்துகளிலும், சுற்றுலா வாகனங்களிலும், காா்களிலும், இருசக்கர வாகனங்களிலும் ஊா்வலமாக பெருந்துறை நோக்கி காலை புறப்பட்டு செல்கின்றனா்.

நாமக்கல் கொங்கு திருமண மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோட்டை சாலை, திருச்செங்கோடு சாலை வழியாக ஊா்வலமாக செல்கின்றனா். மாநாட்டில் கின்னஸ் சாதனைக்கான வள்ளி, கும்மி ஆட்டத்தில் 2 ஆயிரம் மகளிா் பங்கேற்க உள்ளனா். கடந்த 2019-இல் நாமக்கல்லில் கொங்கு மாநில மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. அதேபோல பெருந்துறை மாநாடும் வெற்றிகரமாக அமையும் என்றாா்.

இந்தப் பேட்டியின் போது, கொமதேக மாவட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com