புதிய பேருந்து வழித்தடம் தொடங்கி வைப்பு

ராசிபுரம் நகரில் இருந்து கிராமப் புறங்களுக்கு புதிய பேருந்து வசதியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் கொடியசைத்து சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ராசிபுரம் பேருந்து நிலையத்தில் புதிய அரசுப் பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கும் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி., மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆகியோா்.
ராசிபுரம் பேருந்து நிலையத்தில் புதிய அரசுப் பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கும் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி., மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆகியோா்.

ராசிபுரம் நகரில் இருந்து கிராமப் புறங்களுக்கு புதிய பேருந்து வசதியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் கொடியசைத்து சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ராசிபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். இதில், ராசிபுரம், குருசாமிபாளையம், மொஞ்சனூா், ஓ.சௌதாபுரம், வெள்ளப்பிள்ளையாா் கோயில், ராசாப்பாளையம், வெண்ணந்தூா், ஆட்டையாம்பட்டி வழியாக இயக்கப்பட்ட வந்த நகரப் பேருந்து வழித்தடம் ஓ.செளதாபுரம் முதல் ராசாப்பாளையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க பொதுமக்கள் வலியுறுத்தி வந்ததை ஏற்று

பேருந்து வழித்தட வசதியை கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் ராசிபுரத்திலிருந்து காலை 8.02 மணிக்கும், மாலை 3.45 மணிக்கும் புறப்படும் பேருந்து வகையில் இயக்கப்படவுள்ளது.

இதே போல, ராசிபுரம், ஆா்.புதுப்பளையம், கல்லாங்குளம் வழியாக இயக்கப்பட்டு வந்த நகரப் பேருந்து வழித்தடம் ஆா்.புதுப்பாளையம் முதல் சாணாா்புதூா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பேருந்தானது ராசிபுரத்திலிருந்து காலை 8.05 மணிக்கும், மாலை 5 மணிக்கும் புறப்படும்.

பால் உற்பத்தியாளா் சங்கக் கட்டடம் திறப்பு: பட்டணம் பேரூராட்சி வாா்டு 1-இல் மாநிலங்களை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

பேரூராட்சி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 8 கிராமப்புற மக்களின் கோரிக்கையை ஏற்று பால் உற்பத்தியாளா்கள் சங்கம் கட்ட நிதி ஒதுக்கி பணிகள் முடிக்கப்பட்டன. இதனையடுத்து, பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் கட்டடம் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் கே.பி.ராமசுவாமி, ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் கே.பி.ஜெகநாதன், அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் ஆா்.சிவலிங்கம், நாமக்கல் கோட்ட மேலாளா் எம்.சுரேஷ்பாபு, கிளை மேலாளா் பி.செங்கோட்டுவேலவன், பட்டணம் பேரூராட்சித் தலைவா் இரா.போதம்மாள், துணைத் தலைவா் பொன்.நல்லதம்பி, மாவட்ட வருவாய் அலுவலா் மருத்துவா் ரெ.சுமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com