ரூ. 13.14 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்

மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில், ரூ. 13.14 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா்.
ரூ. 13.14 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்

நாமக்கல் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில், ரூ. 13.14 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா்.

நாமக்கல், ராசிபுரம் நகராட்சிகள், மோகனூா், எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, ஆா்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, பட்டணம், பிள்ளாநல்லூா், அத்தனூா் மற்றும் வெண்ணந்தூா் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று 3,349 பயனாளிகளுக்கு ரூ. 13.14 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டம் டிச. 18-இல் தொடங்கி 27-இல் முடிவுற்றது. 5 நகராட்சிகள், 18 பேரூராட்சிகளில் என மொத்தம் 39 இடங்களில் முகாம்கள் நடைபெற்றன. இதில், பல்வேறு துறை சாா்ந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளித்த மனுக்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், முதல்கட்டமாக, நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய தொகுதிகளில் 2 நகராட்சிகள், 11 பேரூராட்சிப் பகுதிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் மனு அளித்த 3,349 பயனாளிகளுக்கு ரூ. 13.14 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அனைவரும் நலத் திட்டங்களை பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சிகளில், நகா்மன்றத் தலைவா்கள் து.கலாநிதி (நாமக்கல்), கவிதாசங்கா் (ராசிபுரம்), ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், நாமக்கல் கோட்டாட்சியா் மா.க.சரவணன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ச.பிரபாகரன், நகராட்சி ஆணையா்கள் கா.சென்னுகிருஷ்ணன் (நாமக்கல்), இரா.சேகா் (ராசிபுரம்), நாமக்கல் வட்டாட்சியா் சக்திவேல், பல்வேறு துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com