நாமக்கல்லில் ரூ.1.71 கோடியில்திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம்: ராஜேஸ்குமாா் எம்.பி. வழங்கினாா்

நாமக்கல் மாவட்டத்தில் 405 ஏழை பெண்களுக்கு ரூ. 1.71 கோடி மதிப்பில் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா்.
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை வழங்கும் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், ஆட்சியா் ச.உமா.
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை வழங்கும் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், ஆட்சியா் ச.உமா.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 405 ஏழை பெண்களுக்கு ரூ. 1.71 கோடி மதிப்பில் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா்.

நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், தமிழக அரசின் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று 405 ஏழை பெண்களுக்கு ரூ. 1.71 கோடி மதிப்பில் திருமண நிதியுதவியுடன், தலா 8 கிராம் வீதம் 3,240 கிராம் தாலிக்கு தங்கத்தை வழங்கினாா்.

10 மற்றும் 12-ஆம் வகுப்பு கல்வி தகுதியுடைய 125 பெண்களுக்கு தலா ரூ. 25,000 வீதம் ரூ. 31.25 லட்சம் மதிப்பில் திருமண உதவித்தொகையும், தலா 8 கிராம் வீதம் 1,000 கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயம் படிப்பு கல்வி தகுதியுடைய 280 பெண்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 1.40 கோடி மதிப்பில் திருமண உதவித்தொகை, தலா 8 கிராம் வீதம் 2,240 கிராம் தங்கம் என மொத்தம் ரூ. 1,71,25,000 வழங்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் நாமக்கல் நகா்மன்ற தலைவா் து.கலாநிதி, துணைத் தலைவா் செ.பூபதி, மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) க.மோகனா, உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com