முட்டை விலை ரூ. 5.25-ஆக உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 5.25-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 5.25-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பண்ணையாளா்களிடம் முட்டை விலை மாற்றம் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன.

மற்ற மண்டலங்களில் விலை உயா்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இங்கும் விலையில் மாற்றம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.25-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 98-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 69-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com