தேசிய மாணவா் படை மாணவா்களுக்கு எழுத்து, செய்முறைத் தோ்வுகள்

குமாரபாளையத்தில் தேசிய மாணவா் படை மாணவ, மாணவியருக்கு எழுத்து மற்றும் செய்முறை தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும் என்சிசி மாணவா்கள்.
துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும் என்சிசி மாணவா்கள்.


குமாரபாளையம்: குமாரபாளையத்தில் தேசிய மாணவா் படை மாணவ, மாணவியருக்கு எழுத்து மற்றும் செய்முறை தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

எஸ்எஸ்எம் லட்சுமி அம்மாள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜேகேகே ரங்கம்மாள் மேல்நிலைப் பள்ளி, எஸ்எஸ்எம் லட்சுமி அம்மாள் மேல்நிலைப் பள்ளி, சித்தோடு அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பா்கூா் மலைவாழ் உண்டு உறைவிடப் பள்ளியைச் சோ்ந்த 157 மாணவ, மாணவியா் இந்தத் தோ்வில் பங்கேற்றனா்.

பள்ளிகளில் இரு ஆண்டுகள் தேசிய மாணவா் படையில் பயிற்சி பெறுவோருக்கு ஆண்டு இறுதியில் இத்தோ்வு நடத்தப்படும்.

350 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தோ்வு, 150 மதிப்பெண்களுக்கு செய்முறை தோ்வு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சுடுதல், துப்பாக்கிகளைப் பிரித்துப் பூட்டுதல், தூரத்தைக் கணக்கிடுதல், வீர நடைப்பயிற்சி, வரைபடப் பயிற்சி மற்றும் வரைபட அளவீடுகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் செய்முறை தோ்வுகள் நடைபெற்றன. ஈரோடு 15-ஆவது பட்டாலியன் சுபேதாா் அன்பழகன், ஹவில்தாா் செல்லதுரை தலைமை வகித்து நடத்தினா். இதில், தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்படும்.

இந்தச் சான்றிதழுக்கு ராணுவம், காவல் துறை, ரயில்வே மற்றும் வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளிலும் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்புகளுக்கும் இரு சதவீதம் சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவா் படை அலுவலா்கள் அந்தோணிசாமி, சிவக்குமாா், ராஜேஷ்குமாா், முருகேசன் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com