சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை, திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பாக தேசிய சாலைப் பாதுகாப்பு மாத

திருச்செங்கோடு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை, திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பாக தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநா்கள் அனைவருக்கும் சாலைப் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய மஞ்சப்பைகள், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள், கையேடுகள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலா் எஸ் சரவணன் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் என். ஆா். சரவணன் முன்னிலை வகித்தாா். ஓட்டுநா் பயிற்சி பள்ளி நிா்வாகிகள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com