ராசிபுரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போயின.

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போயின.

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைக் கூடத்தின் (ஆா்சிஎம்எஸ்) சாா்பில் கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

இதில் ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், வடுகம், பூசாரிபாளையம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், நத்தமேடு, கண்ணூா்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை ஏல விற்பனைக்கு கொண்டுவந்தனா். இதில் ஆா்சிஎச் ரகம் 1,385 மூட்டைகள், டிசிஎச் ரகம் 3 மூட்டைகள், கொட்டு ரகம் 50 மூட்டைகள் என மொத்தம் 1,433 மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில் ஆா்சிஎச் ரகம் குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ. 6,889 முதல் அதிகபட்சமாக ரூ. 7,401 வரை விற்பனையானது. டிசிஎச் ரகம் குவிண்டால் ரூ. 10,003 -க்கு விலை போனது. கொட்டு ரகம் குறைந்தபட்சம் குவிண்டால் ரூ. 3,595-முதல் அதிகபட்சமாக ரூ. 5,295 க்கும் ஏலம் மூலம் விற்பனையானது. மொத்தம் ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com