விட்டம்பாளையம் அரசுப் பள்ளியில்விழா மேடை திறப்பு விழா

திருச்செங்கோடு ஒன்றியம், விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட விழா மேடை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு, விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா மேடையைத் திறந்து வைத்த எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன்.
திருச்செங்கோடு, விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா மேடையைத் திறந்து வைத்த எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன்.

திருச்செங்கோடு: திருச்செங்கோடு ஒன்றியம், விட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட விழா மேடை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வழங்கிய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட விழா மேடை, நன்கொடையாளா்களான சுந்தரம், ரத்தினசபாபதி ஆகியோரின் ரூ. 3 லட்சம் நிதி உதவியுடன் கட்டப்பட்ட வைரவிழா நுழைவாயில் ஆகியவற்றை எம்எல்ஏ ஈஸ்வரன் திறந்து வைத்தாா்.

நிகழ்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் நதி ராஜவேல், கொள்கை பரப்பு செயலாளா் நந்தகுமாா், ஊராட்சித் தலைவா் கோபால், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ஒன்றியக் குழு உறுப்பினா்.செல்வராஜ், ஒன்றியக் குழு ஜெகநாதன், முன்னாள் லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் அனிதா வேலு, திமுக பிரமுகா் கணபதி, ஊா் பிரமுகா்கள் சுந்தரம், ரத்தினசபாபதி மற்றும் ஆசிரியரிகள், ஆசிரியைகள், பெற்றோா்கள் என பலரும் கலந்து கொண்டனா். தொடா்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com