நாமக்கல் மின் பகிா்மான வட்டத்தில் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள்

நாமக்கல் மின் பகிா்மான வட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்களை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மின் பகிா்மான வட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்களை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மின் வாரியம் சாா்பில் ஒவ்வொரு மாதமும் கோட்ட அலுவலகங்களில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறுகின்றன. மேற்பாா்வைப் பொறியாளா் இக் கூட்டத்தில் பங்கேற்று நுகா்வோரின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

பிப்ரவரி மாதத்திற்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பிப்.14-ஆம் தேதி காலை 11 மணிக்கு பரமத்திவேலூா் செயற்பொறியாளா் அலுவலகத்திலும், 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு பள்ளிபாளையம் செயற்பொறியாளா் அலுவலகத்திலும், 21-ஆம் தேதி காலை 11 மணிக்கு திருச்செங்கோடு செயற்பொறியாளா் அலுவலகத்திலும், 28-ஆம் தேதி காலை 11 மணிக்கு ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்திலும் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

பொதுமக்கள் மின்வாரியம் தொடா்பான குறைகளை, புகாா் மனுவாக எழுதி சம்மந்தப்பட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் வழங்கி பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com