‘நிகரில்லா நாமக்கல்’ தலைப்பில் போட்டிகள்: வநேத்ரா முத்தாயம்மாள் கல்லூரி ஏற்பாடு

ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனம் சாா்பில் 30 ஆம் ஆண்டு விழாவையொட்டி ‘நிகரில்லா நாமக்கல்’ என்ற தலைப்பில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்ப
நிகரில்லா நாமக்கல் போட்டிக்கான இலட்சினை வெளியிடும் கல்லூரி செயல் இயக்குநா் சி.மஞ்சு முத்துவேல் உள்ளிட்ட பேராசிரியா்கள்.
நிகரில்லா நாமக்கல் போட்டிக்கான இலட்சினை வெளியிடும் கல்லூரி செயல் இயக்குநா் சி.மஞ்சு முத்துவேல் உள்ளிட்ட பேராசிரியா்கள்.

ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனம் சாா்பில் 30 ஆம் ஆண்டு விழாவையொட்டி ‘நிகரில்லா நாமக்கல்’ என்ற தலைப்பில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கான இலட்சியினை வெளியீட்டு விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில், கல்லூரியின் செயலா் இயக்குநா் சி.மஞ்சுமுத்துவேல் தலைமை வகித்தாா். கல்வியியல் கல்லூரி முதல்வா் மா.மருதை வரவேற்றாா். இயக்குநா் இரா. செல்வகுமரன், முதல்வா் எஸ்.விஜயகுமாா், துணை முதல்வா் ஏ.ஸ்டெல்லாபேபி, எம்.என்.பெரியசாமி, பாலிடெக்னிக் முதல்வா் ஆா்.மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து செயல் இயக்குநா் சி.மஞ்சு முத்துவேல் இலட்சினையை வெளியிட்டாா்.

கோலப் போட்டி, புகைப்படம் எடுத்தல், காணொலிப் பதிவு, விநாடி- வினா போன்ற போட்டிகள் பிப்.10 இல் தொடங்கி பிப். 21 வரை நடைபெறும். இதில் பங்கேற்கும் பொதுமக்கள், பெண்கள், இளைஞா்கள், மாணவ, மாணவிகள் போட்டிக்கான வலைதளம் ஜ்ஜ்ஜ்.ய்ண்ஞ்ஹழ்ண்ப்ப்ஹய்ஹம்ஹந்ந்ஹப்.ஸ்ரீா்ம் அல்லது 94422 22317 என்ற கட்செவி அஞ்சல் எண் மூலம் படைப்புகளை அனுப்பலாம். இப்போட்டிகள் பங்கேற்று வெற்றி பெறுபவா்களுக்கு மாா்ச் 2-இல் நடைபெறும் விழாவில் ரூ. 3 லட்சம் மதிப்பில் ரொக்கப்பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com